முகப்பு
சிறுவர்மணி

குழந்தைப் பாடல்

நேரம்! வையத்தில் யாவரும் பெற்றுள்ள அரிய செல்வம் நேரமன்றோ நேரத்தை விரயம் ஆக்குவதால் வாழ்வும் வீணாய் போகுமன்றோ? நாட்கள் ஏழு வாரமன்றோ நாட்கள் முப்பது மாதமன்றோ யாருக்கும் இதிலே மாற்றமில்லை இயற்கை வஞ்சனை ச

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

நேரம்!



வையத்தில் யாவரும் பெற்றுள்ள

அரிய செல்வம் நேரமன்றோ

நேரத்தை விரயம் ஆக்குவதால்

வாழ்வும் வீணாய் போகுமன்றோ?



நாட்கள் ஏழு வாரமன்றோ

நாட்கள் முப்பது மாதமன்றோ

யாருக்கும் இதிலே மாற்றமில்லை

இயற்கை வஞ்சனை செய்வதில்லை!



நேரத்தின் பயனை அறிந்திங்கு

உழைத்தவர் சாதனை புரிகின்றார்

பொழுதை வீணாய்க் கழித்தவரோ

வறுமையில் வேதனை அடைகின்றார்!



அணையைத் தாண்டிய வெள்ளம்கூட

அடுத்த மழையில் கிட்டிடலாம்!

புரண்டே நாமும் அழுதாலும்

காலம் மீண்டும் கிட்டிடுமோ?



வாழ்நாள் என்பது வேறல்ல

நேரமே அதுவென நீயறிவாய்!

வாழ்வில் வெற்றி வேண்டுமெனில்

நேரத்தை முறையே செலவிடுவாய்!





 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.