அன்னையின் சக்தி!
ஒருமுறை அன்னை ஸ்ரீசாரதா தேவி கல்கத்தாவுக்குப் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, அன்னையால் வேகமாக நடக்க முடியாததால் அவருடன் வந்த கூட்டம் முன்னால் சென்றுவிட்டது. இருட்டு நேரமாதலால் மனிதர் எவரும் இல்லாத நடுக்காட்டில் அன்னை தனியே சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு கொள்ளைக்காரனும் அவனுடைய மனைவியும் அன்னையின் முன்பு வந்து அவரைத் தடுத்தி நிறுத்தினர். அன்னை மிகவும் இளவயதுக்காரராக இருந்த போதிலும் மன தைரியத்தை இழக்கவில்லை.
அந்த இருவரையும் பார்த்து "அப்பா, அம்மா' என்று அன்பொழுக அழைத்தார். அன்னையின் குரல் அந்தக் கொள்ளைக்காரர்களிடமிருந்த தாய்மை உணர்வைத் தட்டி எழுப்பியது.
Advertisement
தான் தனித்து விடப்பட்ட சூழ்நிலையை அவர்களிடம் அன்னை தெரிவித்தார். இளம் பெண் ஒருத்தி தங்களிடம் பூரண நம்பிக்கை வைத்துப் பேசுவதைக் கண்ட அவர்கள், அன்னையிடம் மிகவும் அன்பாகவும் மென்மையாகவும் நடந்து கொண்டனர்.
அவரை நன்கு கவனித்துக் கொண்டதுடன், அன்னையின் கூட்டத்தாருடன் அவரைச் சேர்த்தும் விட்டனர்.
அன்னையின் ஆன்மிக பலம் கொள்ளையரின் மனத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தியது.