முகப்பு
சிறுவர்மணி

பறவையைத் தொடர்வோம்...

* கரிச்சான் குருவி சாதாரணமாக எல்லா இடங்களிலும் இந்தப் பறவையைப் பார்க்கலாம். ஸ்ரீலங்கா, சீனா, இந்தோனேஷியா நாடுகளிலும் இது அதிகம் காணப்படும் பறவை. 28 செ.மீ. நீளம் இருக்கும். முழுக்க முழுக்க கருப்பு நிறத

Updated On : 19 செப்டம்பர் 2012, 10:37 pm IST
பகிர்:

* கரிச்சான் குருவி

சாதாரணமாக எல்லா இடங்களிலும் இந்தப் பறவையைப் பார்க்கலாம். ஸ்ரீலங்கா, சீனா, இந்தோனேஷியா நாடுகளிலும் இது அதிகம் காணப்படும் பறவை. 28 செ.மீ. நீளம் இருக்கும். முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் இருக்கும். மீனின் வாலைப் போல இதன் வால் இருப்பதால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இதற்கு பயமே கிடையாது. தன்னைவிடப் பெரிய பறவையான காகம் போன்ற பறவைகளுடன் துணிந்து சண்டை போடும். இதனால் இதற்கு ராஜ காகம் என்ற பெயரும் உண்டு. மூக்கின் அருகே வெள்ளையாக ஒரு புள்ளி இருக்கும். பறந்து கொண்டிருக்கும் பூச்சிகளைக் கூடப் பிடித்து உண்ணக்கூடிய ஆற்றல் உடையது.

*  சுடலைக் குயில்

குயிலின் இனத்தைச் சேர்ந்தது. ஆனால் குயிலை விடச் சற்றே பெரியதாக இருக்கும். இந்தியாவில் மழைக்காலம் வரும்போது இந்தப் பறவையை அதிகமாகக் காணலாம். மழையை அறிவிக்கும் பறவை என்றே கூறலாம். ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் அதிகம் காணப்படும். தலையில் உள்ள சிறிய கிரீடம் போன்ற பகுதி இதன் அழகுக்கு அழகு சேர்க்கிறது. வயிற்றுப் பகுதி வெள்ளையாக இருக்கும். பழுப்பும் கருப்பும் கலந்த நிறம். கம்பளிப் பூச்சி இதற்கு மிகவும் பிடித்தமான உணவு. இதன் குரல் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.