ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் மிக்கவர்கள். மேடையில் பேசுவதென்றால் மிகவும் தயங்குவார்கள்.
ஒருமுறை, ரைட் சகோதரர்கள் ஒரு விருந்தில் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசுவதற்காக சகோதரர்களில் மூத்தவரான வில்பர் ரைட்டை அழைத்தார்கள்.
வில்பர் ரைட்டுக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. தன் இருக்கையிலிருந்து எழுந்து மேடைக்குச் சென்ற வில்பர், "எப்போதும் என் தம்பி ஆர்வில்தான் பேசுவது வழக்கம்...' என்று கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கிச் சென்று தனது இருக்கையில் அமர்ந்தார்.
அடுத்துப் பேசுவதற்கு ஆர்வில் அழைக்கப்பட்டார்.
அவர் மேடையேறியதும், "என்னுடைய அண்ணன்தான் ஏற்கனவே சொற்பொழிவு நிகழ்த்திவிட்டாரே..! நான் வேறு எதற்கு...?' என்று கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கி விட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.