முகப்பு
சிறுவர்மணி

மழை பொழியுதடா!

காற்ற டிக்குது! காற்ற டிக்குது! கதவை மூடுங்கடா - நாம் நேற்று நட்ட செடிகள் எல்லாம் தலையை ஆட்டுதடா! மரத்தில் உள்ள காக்கைக் கூடும் மெல்ல ஆடுதடா - அது தரமாய் கட்டி இருப்ப தாலே தங்கி இருக்குதடா! காற்று வீச

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:25 AM
பகிர்:

காற்ற டிக்குது! காற்ற டிக்குது!

கதவை மூடுங்கடா - நாம்

நேற்று நட்ட செடிகள் எல்லாம்

Advertisement

தலையை ஆட்டுதடா!

மரத்தில் உள்ள காக்கைக் கூடும்

மெல்ல ஆடுதடா - அது

தரமாய் கட்டி இருப்ப தாலே

தங்கி இருக்குதடா!

காற்று வீச முகிலின் கூட்டம்

கலைந்து போகுதடா - இதை

மாற்றும் படி சின்னச் சின்ன

மழை விழுகுதடா!

மரத்தின் அடியில் ஆடு மாடு

ஒதுங்கி நிற்குதடா - அந்த

மரத்தைக் காற்று அசைக்க அசைக்க

மழை பொழியுதடா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.