முகப்பு
சிறுவர்மணி

பறவையைத் தொடர்வோம்...

 பெரும்பாலும் இரவிலும் விடியற்காலை வெளிச்சம் வருவதற்கு முன்பும் மீன் வேட்டைக்குச் செல்வதால் இதற்கு இரவுக் கொக்கு என்ற பெயர் வந்தது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

இரவுக்கொக்கு
 
 பெரும்பாலும் இரவிலும் விடியற்காலை வெளிச்சம் வருவதற்கு முன்பும் மீன் வேட்டைக்குச் செல்வதால் இதற்கு இரவுக் கொக்கு என்ற பெயர் வந்தது.
 கொக்கு இனத்தைச் செர்ந்தாலும் சற்றே சிறிய பறவை. 63 செ.மீ. உயரம் இருக்கும். அலகு சிறிதாக இருக்கும், வேட்டையாடும் போது மட்டும் கழுத்தை சற்றே நீட்டிக் கொள்ளும்.
 தலையில் தொப்பி வைத்தாற்போல கருப்பு நிறம் படிந்திருக்கும். உடல் மட்டும் சிறகுகள் வெளுத்த சாம்பல் நிறத்தில் இருக்கும். சிவப்புக் கண்களும் மஞ்சள் கால்களும் கொண்டிருக்கும். அதிக இரைச்சல் போடும் பறவை.
 ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா கண்டத்தைத் தவிர மற்ற எல்லாம் கண்டங்களிலும் பரவலாகக் காணப்படும்.
 மீன்கள்தான் பிடித்த உணவு. இருந்தாலும் மற்ற பறவைகளின் முட்டைகளையும் சாப்பிடும். குழுக்களாக வாழும். புதர்களிலும் மரங்களினடியிலும் கூடு கட்டும். ஒரு சமயத்தில் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். தாய் தந்தை இருவருமே அடைகாக்கும் வழக்கம் உள்ளவை. குஞ்சுகள் 26 நாட்களில் முட்டையிலிருந்து வெளிவரும்.
 
செங்குருகு

 
 செந்நிறத்தில் இருப்பதால் செங்குருகு என்று பெயர். கொக்கு இனத்தைச் சேர்ந்ததது. அலகு சற்றே நீண்டு தடித்துக் காணப்படும். வால் சிறிதாக இருக்கும். கழுத்து சற்றே நீண்டிருக்கும்.
 40 செ.மீ. வரை உயரம் இருக்கும்.
 இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அதிகம் காணப்படும். இவையும் இரவில்தான் மீன் வேட்டைக்குக் கிளம்பும். பெரிய கொக்குகளைப் போல மிகவும் பொறுமைசாலிகள். மீன் வரும் வரை காத்திருக்கும்.
 4 முதல் 5 முட்டைகளை ஒரே சமயத்தில் இடும்.
 
கருங்குருகு

 
 முழுவதும் கருப்பு நிறத்தில் இருப்பதால் கருங்குருகு என்ற பெயர். கழுத்துப் பகுதியில் மட்டும் சற்றே மஞ்சள் நிறம் காணப்படும். இதனால் மஞ்சள் கழுத்து கருங்குருகு என்ற பெயரும் உண்டு.
 ஆஸ்திரேலிய கடற்கரையோரப் பகுதிகளில் அதிகம் காணப்படும். மரங்களில் கூடு கட்டி வாழும். நீர் நிலைகளுக்கு அருகே வசிக்கும். இவை இரவிலும் பகலிலும் மீன் வேட்டையாடும்.
 66 செ.மீ. வரை உயரம் இருக்கும். எடை 400 கிராம்.
 ஒரு சமயத்தில் 5 முட்டைகள் வரை இடும்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.