தேசப் பெருமை ஐந்து
ஆயிரம் கிளைகள் கொண்ட மரம்அதுதான் நமது ஆலமரம்அதுவே நமது தேசமரம்
ஆயிரம் கிளைகள் கொண்ட மரம்
அதுதான் நமது ஆலமரம்
அதுவே நமது தேசமரம்
Advertisement
ஆயிரம் கண்கள் கொண்டதுவாம்
அதுதான் நமது அழகுமயில்
அதுவே தேசப்பறவை யடா
ஆயிரம் விலங்கு இருந்தாலும்
ஆற்றல் மிக்க புலிதன்னை
அழைப்போம் தேச விலங்கென்று
ஆயிரம் மலர்கள் பூத்தாலும்
அழகு மிக்க தாமரைப்பூ
அதுவே நமது தேசமலர்
ஆயிரம் பழங்கள் பழுத்தாலும்
அடடா தேன்சுவை மாம்பழமே
அதுவே தேசப் பழமாகும்
ஆயிர மாயிரம் விளையாட்டில்
அழகு வளைதடிப் பந்தாட்டம் (ஆக்கி)
அதுவே தேச விளையாட்டு!