பறவையைத் தொடர்வோம்...
சற்றே பெரிய பறவை. 66 செ.மீ. நீளம் இருக்கும். எடை 970 கிராம். செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். சிறகுகள் கரும்பச்சை நிறத்தில் பளபளவென்று மின்னும். செம்பழுப்பு நிறக் கால்கள். கொக்கு இனத்தைச் சேர்ந்தது. அலகு அரிவாளைப் போல இருப்பதால் இந்தப் பெயர்.
அரிவாள் மூக்கன்
சற்றே பெரிய பறவை. 66 செ.மீ. நீளம் இருக்கும். எடை 970 கிராம். செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். சிறகுகள் கரும்பச்சை நிறத்தில் பளபளவென்று மின்னும். செம்பழுப்பு நிறக் கால்கள். கொக்கு இனத்தைச் சேர்ந்தது. அலகு அரிவாளைப் போல இருப்பதால் இந்தப் பெயர்.
ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அட்லாண்டிக் பகுதிகளில் அதிகம் காணப்படும் பறவை. ஊர் சுற்றிப் பறவை. 100 பறவைகளுக்கு மேல் உள்ள குழுக்களாக வாழும். சிறிய நீர் நிலைகளில் காணப்படும். நீர்ப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள், பல்லி, குட்டிப் பாம்புகள் ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடும்.
சேறு நிறைந்த பகுதிகளில் வாழ மிகவும் ஆசைப்படும் பறவை.
வெள்ளை அரிவாள் மூக்கன்
வெள்ளை அரிவாள் மூக்கன் பறவை முழுவதும் வெள்ளையாக இருக்கும். அதனால்தான் இந்தப் பெயர். அலகு மட்டும் கருப்பாக இருக்கும். தலை வழுக்கையாக இருக்கும். நீண்ட கருப்பு நிறக் கால்களைக் கொண்டிருக்கும்.
இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் வங்காள தேசத்திலும் அதிகமாகக் காணப்படும் பறவையினம். நேபாளம், ஜப்பான் மற்றும் ஸ்ரீலங்காவிலும் இதைப் பார்க்கலாம்.
2 முதல் 4 முட்டைகளை ஒரு சமயத்தில் இடும்.
சேறும் சகதியுமான நீர் நிலைகளில் இதைப் பார்க்கலாம். பெரும்பாலும் மீன், தவளைக்குஞ்சுகள் மற்றும் நீர்ப்பூச்சிகளை விரும்பிச் சாப்பிடும்.
75 செ.மீ. நீளம் இருக்கும். அலகை சகதிக்குள் செலுத்தி மீன்களைப் பிடித்து உண்பதைப் பார்க்க விநோதமாக இருக்கும்.
கருப்பு அரிவாள் மூக்கன்
கருப்பு அரிவாள் மூக்கனும் மேற்சொன்ன அரிவாள் மூக்கன் இனத்தைச் சேர்ந்த பறவைதான்.
இதன் தலை கருப்பாக இருக்கும். தலையின் உச்சியில் பூ வைத்தது போல சிவப்பு நிறம் காணப்படும். கழுத்தின் அருகே சற்றே வெள்ளையாக இருக்கும். உடல் பகுதி பெரும்பாலும்கருப்பாக இருக்கும்.
ஏரிகள், நதிக்கரைகள் ஆகியவற்றில் வசிக்கும் பறவை. சமயங்களில் விளைநிலங்களிலும் இதைப் பார்க்கலாம்.
இந்தியாவில் ஹரியானாவில் இந்தப் பறவைகள் அதிகம் உள்ளன.
மரங்களில் கூடு கட்டி வசிக்கும்.