இயேசுநாதர் பொன்மொழிகள்
அன்புள்ள இடத்தில் அச்சமில்லை, தூய அன்பு அச்சத்தைத் துரத்திவிட வல்லது.
1. அன்புள்ள இடத்தில் அச்சமில்லை, தூய அன்பு அச்சத்தைத் துரத்திவிட வல்லது.
2. எவரெவர் என் பெயரில் குழந்தைகளை வரவேற்கின்றனரோ அவர்கள் என்னையே வரவேற்கின்றனர்.
3. சின்னஞ்சிறு குழந்தைகள் என்னிடம் வர வழி கொடுங்கள்; அவர்களைத் தடை செய்யாதீர்கள்; அவர்களுக்கு உரியதே ஆண்டவனின் பேரரசாங்கம்.
4. சிறு குழந்தைபோல் எவர் தன்னைப் பணிவாகத் தாழ்த்திக் கொள்கிறாரோ, அவரே பரலோகத்தில் தலைசிறந்தவராக இருப்பார்.
5. மரமானது அதன் கனியைக் கொண்டுதான் அறியப்படுகிறது.
6. செல்வத்திடம் வைக்கும் பேராசை தீமைகள் அனைத்திற்கும் வேர்.
7. உங்களிடத்தில் கேட்கிற எவருக்கும் கொடுங்கள். உங்களுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திருப்பிக் கேட்காதீர்கள்.
8. நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
-ஆர். மகாதேவன், திருநெல்வேலி.