காட்டிலே ஓடுது ரயிலு...
காட்டிலே ரயிலும் ஓடுது பார்கரடியே டிரைவராப் போகுது பார்கூட்டமா விலங்குகள் ஏறுது பார்குதிரைகள் இடமின்றி நிக்குது பார்
காட்டிலே ரயிலும் ஓடுது பார்
கரடியே டிரைவராப் போகுது பார்
கூட்டமா விலங்குகள் ஏறுது பார்
குதிரைகள் இடமின்றி நிக்குது பார்
இஞ்சின் டிரைவர் கரடிக்கு
இன்றைக்கு உதவி குரங்காரு
மஞ்சள் நிறத்து வரிப்புலியோ
டிக்கெட் சோதனை செய்தாரு
கார்டு சிறுத்தை பச்சைக்கொடி
காட்டிட ரயிலும் ஓடியது
லோடு நிறைந்த ரயிலின்மேல்
குருவியும் கிளியும் பாடியது
ரயிலு நிற்கும் ஊரெல்லாம்
சிங்கம் ஸ்டஷன் மாஸ்டர்தான்
குயிலும் ஒட்டகச் சிவிங்கியுமே
சிக்னல் தந்திடும் ஊழியராம்
ஆடு மாடு மான்களுடன்
யானையும் ரயிலில் ஏறுது பார்
காடுமேடு சுற்றிக் கொண்டு
ரயிலும் ஊர்போய்ச் சேருதுபார்!