முகப்பு
சிறுவர்மணி

பறக்கக் கற்றுக் கொள்...

 தூக்கணாங் குருவியிடம் தொழிலைக் கற்றுக்கொள் - கட்டும்

Updated On : 14 ஜூன், 2013 at 10:21 AM
பகிர்:

 தூக்கணாங் குருவியிடம்
 தொழிலைக் கற்றுக்கொள் - கட்டும்
 தொழிலைக் கற்றுக்கொள்
 
 சிலந்தியிடம் வலைபின்னும்
 செய்தி அறிந்துகொள் - தம்பி
 செய்தி அறிந்துகொள்
 
 காக்கையிடம் கூடுகட்டும்
 கலையைக் கற்றுக்கொள் - தம்பி
 கலையைக் கற்றுக்கொள்
 
 ஓடும் மான்கள்போல நீயும்
 ஓடக் கற்றுக்கொள் - தம்பி
 ஓடக் கற்றுக்கொள்
 
 பாடும் குயில்களோடு பழகி
 பாடக் கற்றுக்கொள் - தம்பி
 பாடக் கற்றுக்கொள்
 
 எறும்புகளோடு சேர்ந்து நீயும்
 இயங்கக் கற்றுக்கொள் - தம்பி
 இயங்கக் கற்றுக்கொள்
 
 மீன்களோடு பழகி நீயும்
 நீந்தக் கற்றுக்கொள் - தம்பி
 நீந்தக் கற்றுக்கொள்
 
 பறவைகளோடு பழகி நீயும்
 பறக்கக் கற்றுக்கொள் - தம்பி
 பறக்கக் கற்றுக்கொள்
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.