சிறுவர்மணி

தெரிந்துகொள்ளுங்கள்...

வரலாற்றுச் சம்பவங்களைச் சேகரிக்க இவ்வளவு வித்ச்வாகப் பயணம் செய்த முதல் மனிதர் ஹெரோடெட்டஸ்தான்!

முக்கிமலை நஞ்சன்

தும்பி
 
 தும்பிகளின் கண்கள் மற்றப் பூச்சிகளின் கண்களைவிட அளவில் பெரிதாக இருக்கும். அதனால் அதன் பார்வை சக்தி அதிகம். தும்பியின் கண்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 30,000 லென்ஸ்கள் அமைந்துள்ளன. நமக்கெல்லாம் ஒரு கண்ணில் ஒரே ஒரு லென்ஸ் மட்டுமே உண்டு. பூச்சி இனத்திலேயே மிக வேகமாகப் பறக்கக்கூடியதும் தும்பிதான். இது மணிக்கு சுமார் 58 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
 
 ஈக்கள்
 
 வீட்டு ஈக்களுக்கு வாய் கிடையாது. அவை ஒரு குழாய் போன்ற அமைப்பின் மூலம் உணவை உறிஞ்சியே உண்ணுகின்றன. உணவின் மீது எச்சில் போன்றதொரு திரவத்தைத் துப்பி உணவை மென்மையானதாக மாற்றும். உணவு திரவ வடிவை எட்டியதும் அப்படியே அந்தக் குழாய் வழியே உறிஞ்சிச் சாப்பிடும். இதனால்தான் ஈ மொய்த்த பண்டத்தை உண்ணக்கூடாது என்கிறார்கள்.
 
 பூச்சிகள்
 
 உலகில் வாழும் உயிரினங்களில் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் உயிரினம் பூச்சிகளே!
 10 மில்லியன் முதல் 30 மில்லியன் எண்ணிக்கையில் பூச்சி இனங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
 உலகில் வாழும் மொத்த உயிரினங்களில் 95 சதவிகித உயிரினங்கள் பூச்சிகளே. ஒரு ஏக்கர் பரப்பளவில் லட்சக்கணக்கான பூச்சிகள் வாழும் அளவுக்கு இந்த உலகில் பூச்சிகள் நிறைந்துள்ளன.
 இதுவரை 10 லட்சம் வகையான பூச்சிகளை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதைப் போல இன்னும் 10 மடங்கு எண்ணிக்கையிலான பூச்சி இனங்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளன.
 -தொகுப்பு: மல்லிகா அன்பழகன்,
 அ.யாழினி பர்வதம், சென்னை.
 
 புலி 10
 

 * பொதுவாக புலிகள் தனியாக வாழும்.
 
 * ஆண் புலிகள் சராசரியாக 300 கிலோ எடை இருக்கும்.
 
 * புலிகள் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் ஓடும்.
 
 * புலிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் வேட்டையாடும்.
 
 * புலிகள் தங்கள் எல்லையின் அடையாளத்தை சிறுநீரை வைத்து முகர்ந்து அறிந்து கொள்ளும்.
 
 * புலிகளின் அதிகபட்ச ஆயுட்காலம் 27 ஆண்டுகள்.
 
 * புலியின் எல்லை அதிகபட்சமாக 20 சதுர கிலோமீட்டர்கள்.
 
 * புலிப் பண்ணை உள்ள நாடு சீனா.
 
 * இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 1,706 என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.
 
 * புலிகள் தங்களைவிடப் பெரிய விலங்குகளை தொண்டைப் பகுதியில் தாக்கி வீழ்த்தும்.
 -தொகுப்பு: ஆ.திலீபன், திருநெல்வேலி.
 
 
 ஹெரோடெட்டஸின் சாதனை!
 
 பயணம் செய்வதற்கு எந்த வசதிகளும் இல்லாத அந்தக் காலத்தில் - பாதைகள் ஒழுங்காக அமையாத புராதன காலத்தில் - பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்த "வரலாற்று சாஸ்திரத்தின் தந்தை' என்றழைக்கப்பட்ட ஹெரோடெட்டஸின் சாதனை பிரமிப்பு ஊட்டக்கூடியது. அவர் }
 * ஏதென்ஸுக்கு தெற்கே எகிப்து நாட்டின் நைல் நதிக்கரை வரை பயணம் செய்தார்.
 
 * ஆசியாவில் பாபிலோனியாவைத் தாண்டி பாரசீகம் வரை வந்தார்.
 
 * கருங்கடலில் பயணம் செய்து டான்யூப் நதியின் சங்கமத்தை தரிசித்தார்.
 
 * கிரிமியா தீபகற்பத்தில் உலவினார்.
 
 * ஜார்ஜியா என்று இப்போது அழைக்கப்படும் பிரதேசத்துக்கு சென்றிருக்கிறார்.
 
 * டயர் நதியில் பயணம் செய்து சிரியா நாட்டுக் கடற்கரைக்குச் சென்றிருக்கிறார்.
 
 * லிவியா நாட்டு மண்ணிலும் அவர் பாதங்கள் பதிந்தன.
 
 * கிரேக்கத்தைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தனை இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறார்.
 
 * வரலாற்றுச் சம்பவங்களைச் சேகரிக்க இவ்வளவு வித்ச்வாகப் பயணம் செய்த முதல் மனிதர் ஹெரோடெட்டஸ்தான்!
 -தொகுப்பு: முக்கிமலை நஞ்சன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT