முகப்பு
சிறுவர்மணி

முத்துக் கதை

மன்னர் மதிசீலருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ""தாய் சொல்லைத் தட்டாதே. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை... என்கிறார்கள்! இரண்டு பேரும் ஒரே கருத்தைச் சொன்னால்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:01 PM
பகிர்:

யார் சொல்வதைக் கேட்பது?
மன்னர் மதிசீலருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ""தாய் சொல்லைத் தட்டாதே. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை... என்கிறார்கள்! இரண்டு பேரும் ஒரே கருத்தைச் சொன்னால் பிரச்னை இல்லை. மாற்றிச் சொன்னால் யார் சொல்வதைக் கேட்பது?'' என்று அமைச்சர் அருள்மதியிடம் கேட்டார்.
 அவருக்கும் குழப்பமாக இருந்தது. ""தாய் எப்போதும் தன் குழந்தை நலனில் அக்கறை உடையவள். ஆனால் தந்தை வெளி உலக அறிவுடன் ஆலோசனை சொல்பவர். எதற்கும் நம் குலகுருவிடம் விளக்கம் கேட்கலாம்..'' என்றார் அவர்.
 
 காட்டில் தவம் இயற்றும் குல
 குருவின் குடிலை அடைந்து அவர் முன்னால் பய பக்தியுடன் அமர்ந்தனர். அவர் கண்களை மூடி தியானத்தில் இருந்தார்.
 அப்போது குருவின் மனைவி தன் மகனிடம், ""மகனே மன்னருக்கும் அமைச்சருக்கும் பழங்கள் எடுத்து ஒரு தட்டில் வை. நான் பால் எடுத்து வருகிறேன்'' என்றார்.
 குரு கண்ணை மூடியபடி ""மகனே விசாகா... ஓலைச் சுவடியுடன் வா.. எழுத்தாணியால் நான் சொல்வதை உடனே எழுது!'' என்றார்.
 குருவின் மகன் விசாகன், ஒரு கணம் திகைத்தான் எதை முதலில் செய்வது என்று?
 பிறகு அன்னை கூறியபடி, பழங்களை ஒரு தட்டில் மன்னர் முன் பணிவுடன் வைத்தான்.
 அதன் பிறகு ஓலைச் சுவடி, எழுத்தாணியுடன் தகப்பனார் முன் அமர்ந்தான். அமைச்சருக்குப் புரிந்துவிட்டது.
 ""மன்னா இருவர் சொல்வதையும் கேட்டுத் தன் சுய அறிவால் முடிவெடுத்தான் விசாகன்..! வாருங்கள் போகலாம்'' என்றார்.
 -என்.எஸ்.வி.குருமூர்த்தி, கும்பகோணம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.