குறள் பாட்டு
விட்டுவிடு விட்டுவிடுவேண்டாத செயல்களை
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:35 PM
வினைத்தூய்மை
(பொருட்பால் - அதிகாரம் 66 - பாடல் 2)
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
-திருக்குறள்
விட்டுவிடு விட்டுவிடு
வேண்டாத செயல்களை
நல்ல நல்ல செயல்களை
நாளும் செய்ய எண்ணிடு
புகழில்லாத செயல்களை
என்றும் செய்யக்கூடாது
நன்மையில்லாச் செயல்களை
விட்டு விலகிச் சென்றிடு.