குறள் பாட்டு
சொல்லில் செயலில் பெரியவர்திறமை போற்றி வாழணும்
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:42 PM
பெரியாரைப் பிழையாமை
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
-திருக்குறள்
சொல்லில் செயலில் பெரியவர்
திறமை போற்றி வாழணும்
போற்றாது வாழும் வாழ்க்கையில்
பெரிய துன்பம் சேர்ந்திடும்
திறமை என்பது என்றுமே
கை கொடுத்து உதவிடும்
அவரின் அன்பை இழப்பதில்
அல்லல் தொல்லை வந்திடும்