பாப்பாவும் பட்டாம்பூச்சியும்
சின்னச் சின்னப் பூச்சிதான் சிறுவர் விரும்பும் பூச்சிதான்!
சின்னச் சின்னப் பூச்சிதான்
சிறுவர் விரும்பும் பூச்சிதான்!
வண்ண வண்ணச் சிறகுடன்
வட்டம் போடும் பூச்சிதான்!
குட்டிக் குட்டிச் செடியிலே
குத்தும் பட்டாம் பூச்சிதான்!
பட்டிப் பூவைத் தேடியே
பறக்கும் வண்ணப் பூச்சிதான்!
கிட்டப் போனால் பிடிக்கவே
எட்டப் பறந்து போகுமாம்!
குட்டிப் பாப்பா பார்த்துமே
கையைத் தட்டிச் சிரிக்குமாம்!
அங்கே பாரு சிரிக்குது
அழகுப் பட்டாம் பூச்சிதான்!
இங்கே பாப்பா சிரிக்குது
இதுவும் பட்டாம் பூச்சிதான்!