முகப்பு
சிறுவர்மணி

பாட்டி வைத்தியம்

ஓயாத இருமலுக்குதுளசி மிளகு சேர்த்துக்கோ!

Updated On : 18 அக்டோபர், 2013 at 8:19 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:49 PM

 ஓயாத இருமலுக்கு
 துளசி மிளகு சேர்த்துக்கோ!
 மஞ்சள் காமாலை வந்ததுன்னா
 கீழாநெல்லி எடுத்துக்கோ!
 
 தீராத பல்வலிக்கு
 கண்டங் கத்தரி சேர்த்துக்கோ!
 நெஞ்சு சளி பிடிச்சுதுன்னா
 தூதுவளை எடுத்துக்கோ!
 
 சர்க்கரைநோய் குறையணுமா
 பாகற் காய் சேர்த்துக்கோ!
 குப்பை மேனி இலையரைச்சி
 சிரங்குமேல பூசிக்கோ!
 
 மணத்தக்காளிகீரை சாப்பிட்டு
 வாய்ப் புண்ணை ஆத்திக்கோ!
 மலச் சிக்கலுக்கு வெந்தயத்தை
 ஊறவச்சி சாப்பிட்டுக்கோ!

 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.