தமிழுக்கு ழகரம் சிறப்பு
தமிழ் இறுதியில் அதுவும் இருக்கு
ழா, ழி, ழை, ழு, ழகரம்
ழகரம் தமிழுக்கு சிகரம்
தமில் என சொல்வது தவறு
தமிழ்என நீயும் பகரு
அழகென சொல்வது சரியே
அலகென சொன்னால் மூக்கு
எழுத்தென எழுது இனிமை
எலுத்தென எழுதுதல் தவறே
பழமென சொன்னால் சுவையே
பலமென சொன்னால் வலிமை
அழகாய் ழகரத்தை எழுது
அன்றேல் மொழியும் பழுது
மொழிக் குயிர் ழகரமாகும்
மொலி என்றால் தமிழ் சாகும்.
-பொன்மணிதாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.