மயில் தோகை இலகு
மனம் நெகிழ்தல் இளகு!
மரத்துள் ஒன்று இலந்ûதை
மகவின் பெயரோ இளந்தை!
தானியம் அளப்பது கலம்
தானியம் அடிப்பது களம்!
குடிப்பிறப்பென்பது குலம்
நீர் நிலை என்பது குளம்!
தானியம் என்பது கூலம்
குப்பை என்பது கூளம்!
புள்ளியில் போடுவது கோலம்
பூமியின் வடிவம் கோளம்!
வானத்தின் நிறம் நீலம்
நீண்டு இருப்பது நீளம்!
ஆற்றின் குறுக்கே பாலம்
உலோகத் துண்டு பாளம்!
மு.இளங்கோவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.