கரும்போ கரும்பு
கரும்பை முதன்முதலில் தமிழகத்திற்குக் கொண்டு வந்த பெருமை தகடூர் அகத்தியர் குல முன்னோர்களுக்கே உரியது. கரும்பை சக்கரத்தில் வைத்துப் பிழிந்து
கரும்பை முதன்முதலில் தமிழகத்திற்குக் கொண்டு வந்த பெருமை தகடூர் அகத்தியர் குல முன்னோர்களுக்கே உரியது. கரும்பை சக்கரத்தில் வைத்துப் பிழிந்து அதன் சாற்றை எடுத்து இனிப்பு தயாரிப்பதால் அந்தப் பொருளுக்குச் சர்க்கரை எனப் பெயர் ஏற்பட்டது.
சர்க்கரையை லத்தீன் மொழியில் சக்கரம்
என்பர். அலெக்ஸôண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த போது அவனது வீரர்கள் வழிநெடுக கரும்பைப் பார்த்தார்கள். விளையாட்டாக அதில் ஒன்றை ஒடித்து வாயில் வைத்துக் கடித்தனர். இனிப்புக்காக அதற்கு முன் அவர்கள் தேனையே பயன்படுத்தி இருந்ததால் கரும்பின் சுவை அவர்களை கவர்ந்தது. தேன்நாணல் இது எனத் தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.
பின் அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பும் போது சில கரும்புத்துண்டுகளையும் எடுத்துச் சென்றனர். தேனீக்கள் உதவியின்றி தேனைக் கொடுக்கும் செடி இந்தியாவில் விளைகிறது எனத் தங்கள் நாட்டினரிடம் சொல்லிக் கரும்பை அறிமுகப்படுத்தினார்கள். 7-ஆம் நூற்றாண்டில் கரும்பு இந்தியாவில் இருந்து எகிப்துக்கும் பின் ஐரோப்பிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் பரவியது. கொலம்பஸ் தனது கடல் பயணத்தில் கரும்பை உபயோகப்படுத்தி இருக்கிறார்.
இன்று தாய்வான், ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் இந்தோனேஷியா, பிரேசில், ஆஸ்திரேலியா, சிலி மொரிஷியஸ் ஆகிய நாடுகளிலும் பயிராகிறது. கரும்பின் அருமையை 15ஆம் நூற்றாண்டில் தான் ஆங்கிலேயர்கள் அறிந்தனர். அதுவரை அவர்கள் தேனையே பயன்படுத்தி வந்தனர். 13.11.1800}ஆம் ஆண்டு புக்கானன் என்ற ஆங்கிலேயர் திருச்சி
மாவட்டம் கரூருக்கு வந்திருந்தார். அவர் தன் குறிப்பில் புகளூர் சர்க்கரை உற்பத்தி பற்றி எழுதி இருந்தார். கேம்பல் என்ற ஆங்கிலேயர் வெல்லத்தை சர்க்கரை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
கரும்பை பயன்படுத்தி அதிலிருந்து வெள்ளைச் சர்க்கரையை ஆலைகள் மூலம் தயாரிக்கும் முறை முதன்முதலில் ஈராக்கில்தான் துவக்கப்பட்டது. கரும்பில் இருந்து தயாராகும் முன்னர் ஒடியாவைவைச் சேர்ந்த அஸ்கா நகரிலிருந்து தமிழ்நாட்டில் இறக்குமதியானது, அதனாலயே சர்க்கரையை அஸ்கா என்று தமிழர்கள் அழைத்தனர். இன்று பலவிதமான நிறங்களில் கரும்பு பயிராகிறது.
தமிழ்நாட்டில் வெள்ளை சர்க்கரை தயாரிக்கும் ஆலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது இந்த சர்க்கரையை உணவில் பயன்படுத்த சைவர்கள் தயக்கம் காட்டினர். காரணம் அக்காலத்தில் எலும்பை எரித்து அதிலிருந்து ஏற்படும் கரியை அழுக்கை அகற்றுவதற்காக பயன்படுத்தினர். இப்போது சர்க்கரை ஆலைகளில் அழுக்கை அகற்ற கரியைப் பயன்படுத்துவதே இல்லை.
} ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.