வெங்காயம்
எந்தக் குழம்பாய் இருந்தாலும் இதுவும் அதிலே கலந்திடுமாம்!
செந்நிறம் பார்க்க அழகுடனே
சிரிப்பது போல தெரிந்திடுமாம்!
கண்ணீர் விடாத கண்களையும்
கண்ணீர் சொட்டிட வைத்திடுமாம்!
எந்தக் குழம்பாய் இருந்தாலும்
இதுவும் அதிலே கலந்திடுமாம்!
வெந்தயத்தோடு வதங்கியுமே
வெந்தே சுவையைத் தந்திடுமாம்!
கட்டித் தயிருடன் சோற்றுக்குக்
கடித்துத் தின்ன தனிச்சுவையாம்!
மட்டில் லாத நன்மைகளாம்
மருத்துவ குணமும் உள்ளதுவாம்!
உரித்தால் தோலும் வந்திடுமாம்
உரித்திட உரித்திடத் தோல் வருமாம்!
உரித்து முடித்துப் பார்த்தாலோ
ஒன்றுமில்லை, "வெங்காயம்'!
இருந்த தெல்லாம் உரிந்தபின்னே
ஏது மில்லா வெங்காயமாய்
இருப்போர் தம்மைப் போற்றிடுவோம்
எல்லாம் கொடுத்த கர்ணனென்றே!