வேறு வழி இல்லை!
வங்காளத்தில் பிரபல நாவலாசிரியர் சரத் சந்திரர் நண்பர் ஒருவர் இவரைச் சந்தித்து, ""நீங்கள் எப்படி எழுத்தாளர் ஆனீர்கள்?'' என்று கேட்டார்.
வங்காளத்தில் பிரபல நாவலாசிரியர் சரத் சந்திரர் நண்பர் ஒருவர் இவரைச் சந்தித்து, ""நீங்கள் எப்படி எழுத்தாளர் ஆனீர்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு சரத்சந்திரர், ""நான் ரங்கூனில் வேலை செய்து கொண்டிருந்தேன். சம்பளம் போதவில்லை. எனவே வேலையும் செய்து கொண்டு ஒரு பலசரக்குக் கடையும் நடத்தலாம் என்று முடிவு செய்தேன். "என்னால் பலசரக்குக் கடை வைத்து நடத்த முடியுமா?' என்று என் மனைவி சந்தேகப்பட்டு சில மளிகைச் சாமான்களின் விலைகளைச் சொல்லிவிட்டு எல்லாவற்றையும் மனக்கணக்காகக் கூட்டி எவ்வளவு? என்று கேட்டாள். என்னால் சரியாகக் கணக்குச் சொல்ல முடியவில்லை. உங்களால் பலசரக்குக் கடை எல்லாம் நடத்த முடியாது என்று தீர்ப்புக் கூறிவிட்டாள்.
அதன் பிறகு என்ன பண்ணுவது என்று யோசித்தேன். வேறு வழி இல்லாமல் கதை எழுத ஆரம்பித்து விட்டேன் என்றார்.