முகப்பு
சிறுவர்மணி

ஒளவை மொழியே அழகு!

குவலயம் போற்றுகின்ற கொன்றைவேந் தன்நம்அவலத்தைப் போக்கும் அழகுத் - தவத்தமிழில்பவ்வமே சூழ்ந்த பரந்த உலகினில்ஒüவை மொழியே அழகு.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:51 AM
பகிர்:

(நேரிசை வெண்பா)

குவலயம் போற்றுகின்ற கொன்றைவேந் தன்நம்

அவலத்தைப் போக்கும் அழகுத் - தவத்தமிழில்

பவ்வமே சூழ்ந்த பரந்த உலகினில்

ஒüவை மொழியே அழகு.

ஆத்தீ இச்சூடி அருந்தமிழ் நூல்தந்து

மூத்த தமிழ்மொழியை மூவாமல் - காத்துமே

கல்வியேதான் கற்றது கைமண் அளவென்ற

ஒüவை மொழியே அழகு.

நல்வழி என்றிடும் நற்றமிழ் நூல் பாடித்

தொல்லுலகில் நீங்காச் சுவைதந்து - எல்லையிலா

இவ்வுலகில் செந்தமிழை ஏற்றம் பெறச் செய்த

ஒüவை மொழியே அழகு.

மூதுரை என்றநல் முத்தான நூல்தந்து

ஆதரவாய்த் தமிழில் அறநூலை - வேதமாகப்

பவ்வமே சூழ்ந்த பாருமே போற்றுகின்ற

ஒüவை மொழியே அழகு.

எத்தனையோ நூல்கள் இருந்தாலும் இவ்வுலகில்

அத்தனையும் மிஞ்சி அழகுறவே - சத்துமாகி

ஒüடதம் போன்ற அருமருந் தாகுமாம்

ஒüவை மொழியே அழகு.

அல்லல்போம் என்றுநாம் ஆனை முகத்தோனைப்

பொல்லாத பிள்ளையாரைப் போற்றினால் - வல்வினைகள்

அவ்வளவும் அன்றே அகன்றொழிந்து போகுமென்ற

ஒüவை மொழியே அழகு.

அதியமான் என்ற அரும்பெரும் வள்ளல்

அதிசயமாய்ப் பெற்ற அருநெல்லி - வித்தினையே

ஒüடதமாய்த் தான்பெற்று ஆயுளையும் நீட்டித்த

ஒüவை மொழியே அழகு.

தொண்டைமான் மன்னனிடம் தூதாகச் சென்றுதன்மேல்

அன்புகொண்ட வள்ளல் அதியமான் - வன்மைதனைப்

பவ்வியமாய் எல்லோரும் பாராட்டப் பாடியுள்ள

ஒüவை மொழியே அழகு.

முழு கட்டுரையைப் படிக்க →