சிறுவர்மணி

விடுகதைகள்

வீட்டிலிருப்பான் காவலாளி... வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி... இவர்கள் யார்?

ரொசிட்டா

1.  வீட்டிலிருப்பான் காவலாளி... வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி... இவர்கள் யார்?

2.  எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது... இது என்ன?

3.  உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு... இது என்ன?

4.  உருவத்தில் சிறியவன்... உழைப்பிலோ பெரியவன்... இவன் யார்?

5.  காலில் தண்ணீர் குடிப்பான்... தலையில் முட்டையிடுவான்... இவன் யார்?

6. எட்டாத ராணி இரவில் வருவாள்... பகலில் மறைவாள்... இவள் யார்?

7.  நடந்துகொண்டேயிருந்தவன் நின்றான்... தலையைச் சீவினேன். மறுபடியும் நடக்க ஆரம்பித்தான்... இவன் யார்?

8.  வால் நீண்ட குருவிக்குத் தலை உண்டு... வயிறில்லை... இவன் யார்?

9.  அம்மா போடும் வட்டம்... பளபளக்கும் வட்டம்... சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன ஆசை... இது என்ன?

விடைகள்:

1. பூட்டு, சாவி

2. மின்விசிறி

3. பாய்

4. எறும்பு

5.தென்னை மரம்

6. நிலா

7. பென்சில்

8. அகப்பை

9. அப்பளம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT