முகப்பு
சிறுவர்மணி

தோற்றம் சிறியது! செயலோ பெரியது!

சின்னத் தலை கொண்ட ஊசிசேர்த்துத் தாளை இணைக்கும்!சின்னத் துளை கொண்ட ஊசிதுணியை ஆடையாக்கும்!

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:

சின்னத் தலை கொண்ட ஊசி

சேர்த்துத் தாளை இணைக்கும்!

சின்னத் துளை கொண்ட ஊசி

துணியை ஆடையாக்கும்!

சின்னஞ்சிறு தூரிகைகள்

சேர்ந்து கோடு போடும்!

கண் கவரும் ஓவியங்கள்

கண்ணெதிரே பிறக்கும்!

சின்னஞ்சிறு அச்சாணி

வண்டி ஓட உதவும்!

சின்ன எழுது கோலினாலே

சீர்திருந்தும் நாடும்!

சின்னஞ்சிறு தேனீயெல்லாம்

இனிக்கும் தேனை அளிக்கும்!

சின்னஞ்சிறு மழைத்துளியால்

செடிகளெல்லாம் முளைக்கும்!

சின்னஞ்சிறு எறும்பும் ஊறக்

கல்லும் கூடத் தேயும்!

சுண்டெலியின் துணையும் கூடச்

சிங்கத்துக்கும் உதவும்!

சின்னஞ்சிறு தம்பி தங்கை

"என்னால் என்ன முடியும்?'

என்று மட்டும் தயங்க வேண்டாம்

எல்லாம் உம்மால் முடியும்!

எண்ணத்திலே எழுச்சி வந்தால்

ஏழ்மையெல்லாம் பறக்கும்!

மண்ணில் பூத்த பூக்களெல்லாம்

மாலையாகிச் சிரிக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.