காந்திஜியின் பொன்மொழிகள்
இதைச் செய்வது நமது கடமையாகும் என்று தெரிந்து செய்வதுதான் ஒழுக்கம். அச்சத்தாலும் பலவந்தத்தாலும் செய்யும் செயல் ஒழுக்கமாகாது.
* இதைச் செய்வது நமது கடமையாகும் என்று தெரிந்து செய்வதுதான் ஒழுக்கம். அச்சத்தாலும் பலவந்தத்தாலும் செய்யும் செயல் ஒழுக்கமாகாது.
* தன்னலமில்லாத செயல்களே ஒழுக்கமாகும்.
* அகிம்சையைப் பின்பற்றும்போது நாம் துன்பத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறோம்.
Advertisement
* கத்தியின் கூர்மையான முனையைவிட அகிம்சை வழி செல்லும் ஆன்மாவின் உறுதிப்பாடு சக்தி வாய்ந்தது.
* மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத் தவிர வேறொரு ஆயுதம் இல்லை.
* எங்கு அச்சம் மிகுந்திருக்கிறதோ அங்கு சமய வாழ்க்கை என்பது சாத்தியமில்லை.
* அஞ்சாமை மனிதன் பெறக்கூடிய எல்லாக் குணங்களிலும் முதன்மையானது.
* சில சமயங்களில் அறிவு நமக்கு வழிகாட்டுவதில்லை. அப்போது நமது நம்பிக்கையே வழிகாட்டுகின்றது.