சிறுவர் பாடல்: அரும்புகள் மலரும்!
இன்றைய அரும்புகள்நாளைய பூக்கள்
இன்றைய அரும்புகள்
நாளைய பூக்கள்
எங்கும் மணம் கமழும்!
இன்றைய சிறுவர்
நாளைய தலைவர்
நாட்டில் ஏற்றம் வரும்!
இன்றைய விதைகள்
நாளைய மரங்கள்
எங்கும் நிழல் கிடைக்கும்!
இன்றைய எண்ணம்
நாளைய செயல்கள்
எங்கும் நலம் பெருகும்!
இன்றைய உழைப்பு
நாளைய மேன்மை
எங்கும் ஒளி பரவும்!
இன்றைய அன்பு
நாளைய பண்பு
எங்கும் அமைதி வரும்!