பொன்மொழிகள்
* நீ செய்யும் காரியத்திற்கு நீயே பொறுப்பாளியாக இருக்க வேண்டும். நீ செய்வதற்குப் பிறர் தண்டனை அடையும்படி ஏற்படக் கூடாது.
* நீ செய்யும் காரியத்திற்கு நீயே பொறுப்பாளியாக இருக்க வேண்டும். நீ செய்வதற்குப் பிறர் தண்டனை அடையும்படி ஏற்படக் கூடாது.
-மாக்சிம் கார்க்கி
* நல்ல செயல்கள் நம்மை உயர்த்துகின்றன. நாம் நம் செயல்களின் புதல்வர்களாக இருக்கிறோம்.
-செர்வாண்டிஸ்
* நேரத்தை நாம் இதயத் துடிப்புகளைக் கொண்டு கணக்கிட வேண்டும். எவன் மிக அதிகமான சிந்தனை செய்கிறானோ அவனே அதிகமாக வாழ்பவன் ஆவான்.
-பெய்லி
* தூய சொல்லும் நேர்மையும் ஒருவனை எந்த நாடு வழியாகவும் வெற்றி மாளிகைக்கு அழைத்துச் செல்லும்.
-மில்டன்
* கீழ்நோக்கிப் பார்க்கும் ஒருவன் நாத்திகம் பேசலாம். மேல்நோக்கிப் பார்க்கும் எவனும் கடவுள் இல்லை என்று சொல்லவே மாட்டான்.
-ஆப்ரஹாம் லிங்கன்
* தன் சக்தியிலிருந்து முடிந்த அளவு சாறு பிழிவதே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை லட்சியமாய் இருக்க வேண்டும்
-நிக்டர்
* குளம் நிரம்ப நீர் இருந்தாலும் நம் குடத்தின் அளவுதான் நாம் கொள்ள முடியும். நம் எண்ணத்தின் பிரதிபலிப்புதான் பலன்.
-டிஸ்ரேலி
* நன்மை ஒரு நல்ல வைத்தியன்தான். ஆனால் தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்.
-எமர்சன்
* விலையுயர்ந்த வேலைப்பாடுள்ள உடையணிந்து நரகம் செல்வதைக் காட்டிலும் கந்தைத் துணியுடுத்தி சுவர்க்கம் செல்வது மேல்.
-தாமஸ் புல்லர்
* மனிதன் தன்னிடத்தில் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை உணர்ந்து செயலில் ஈடுபடும்பொழுது அவனால் சாதிக்க முடியாத செயல் எதுவுமே இருக்க முடியாது.
-கதே
* கடவுள் மாயாஜால வித்தைக்காரர் அல்லர். நினைத்தபடியெல்லாம் வகை வகையான உருவங்களில் அவதாரங்கள் எடுக்க மாட்டார். அவர் என்றென்றும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்.
-பிளேட்டோ