முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்: நூற்றுக்கு நூறு

தேர்வு வருது தேர்வு வருதுசெல்லமான மாணவர்களே

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

தேர்வு வருது தேர்வு வருது

செல்லமான மாணவர்களே

ஆர்வமுடனே படிக்கின்றீர்கள்

அருமை உங்கள் முயற்சி வாழ்க!

பாடம் மனதில் பதிய வையுங்கள்

படித்ததை நன்றாய் எழுதி விடுங்கள்

பாடம் தன்னை எழுதும் பணியே

பலமுறை படிப்பது போலது வாகும்

படித்ததில் முக்கிய குறிப்புகள் எடுங்கள்

பார்த்தே மனதில் பதிய வையுங்கள்

அடிக்கடி கேள்விகள் தனைப் பாருங்கள்

அதற்கான பதில்கள் மனதில் வையுங்கள்

நானே தேர்வில் முதலாய் வருவேன்

நம்பிக் கைதனை மனதில் வையுங்கள்

தேனாய் பாலாய் இனிக்கும் மனதில்

தேர்வில் முதலாய் வருவீர் நிச்சயம்

என்னால் முடியும் என நம்புங்கள்

எனது லட்சியம் முதலாய் வருதல்

உண்மை லட்சியம் நிச்சயம் வெல்லும்

உறுதி நூற்றுக்கு நூறே பெறுவீர்

முழு கட்டுரையைப் படிக்க →