"வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கலந்துகொண்டு, கூட்டம் முடிந்து வெளியே வரும்போது நேருஜியின் "கோட்'டிலிருந்து விழுந்த ரோஜா மலரை ஒரு சிறுவன் எடுத்துக்கொண்டு, நேருஜி ஏறிப் போன ஜீப்பின் பின்னால் ஓடினான்.
அவனைப் பார்த்த நேருஜி ஜீப்பை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி, சிறுவன் தந்த ரோஜா மலரை வாங்கிக்கொண்டு ""நீ கொண்டு வந்தது பூவை அல்ல, உன் பரிசுத்தமான இதயத்தை'' என்று அவனை மகிழ்ச்சியோடு தட்டிக் கொடுத்து தான் ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு, ஜீப்பில் சிறுவனை ஏற்றி அவனுடைய கிராமத்திற்கு அனுப்பி வைத்தார் சிறுவர்களிடம் அன்பு கொண்ட அந்த "ரோஜாவின் ராஜா'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.