முகப்பு
சிறுவர்மணி

குளிர்!

சபர்மதி ஆசிரமத்தில் உள்ள தொண்டர்கள் குளிர் காரணமாக பக்கத்தில் உள்ள நதியில் வழக்கப்படி குளிக்கச் செல்லவில்லை.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

சபர்மதி ஆசிரமத்தில் உள்ள தொண்டர்கள் குளிர் காரணமாக பக்கத்தில் உள்ள நதியில் வழக்கப்படி குளிக்கச் செல்லவில்லை. இதை அறிந்த காந்திஜி "ஆண்டவன் நமக்காக நதியில் நீரைக் கொடுத்திருக்கிறார்...,நடக்கவும், குளிக்கவும் கை கால்களைத் தந்துள்ளார். அப்படியிருந்தும் ஏன் உட்கார்ந்துள்ளீர்கள் போய் குளிப்பதுதானே?'' என செல்லமாகக் கடிந்து கொண்டார்.

இதைக் கேட்ட ஆசிரமச் சிறுவன் ஒருவன் "பாபுஜி கடவுள் குளிரையும் கூடவே கொடுத்திருக்கிறாரே' என்றான். அதைக் கேட்ட காந்திஜி உள்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.