பொன்மொழிகள்
அறிவில்லாத நேர்மை பலவீனமானது. நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.
* அறிவில்லாத நேர்மை பலவீனமானது. நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.
- சாமுவேல் ஜான்சன்
* நாள் முழுதும் கணத்திற்குக் கணம், நேர்மையாய், துணிவாய், உண்மையாய் உழைக்கிறவர்கள் கரங்களே அழகிய கரங்கள்.
Advertisement
- அப்துல் கலாம்.
* நேர்மையுடன் வாழ மன உறுதி வேண்டும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் ஆற்றல் வேண்டும். சபல புத்தி
இருக்கக் கூடாது.
- காந்தியடிகள்.
* உன்னத நெறிகளையும், உயர்ந்த மதியும், நேர்மையும் கொண்டவரே உயர்ந்த மனிதர்.
- கன்ஃப்யூஷியஸ்
* உங்கள் உடல் நலனை எப்படிப் பாதுகாக்கிறீர்களோ அதே போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்
- ஜவஹர்லால் நேரு
* உடை உடுத்துவதில் கவனக்குறைவாக இருக்கலாம். ஆனால் நேர்மையைக் கடைப்பிடிப்பதில் கவனக் குறைவு கூடாது.
- மார்க் ட்வெய்ன்.
* எல்லா மனிதர்களும் சமமானவர்களே பிறப்பினால் உயர்வடைவதில்லை. ஆனால் தங்களின் நல்ல பண்புகளினாலேயே உயர்வடைகிறார்கள்.
- வால்டேர்
* எந்த ஒரு அசையாத சொத்தையும் விடச் சிறந்தது நேர்மை!
- ஜான்டில்லிங்ஸ்
* நேர்மைக்குச் சோதனைகள் அதிகம்! ஆனால் சாதனைகளின் உலைகளம் அது!
- ஹுயுகான்
-அ.ராஜாரகுமான், கம்பம்.