கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் டிசி டிரைலர்!
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி திரைப்படத்தின் டிரைலர் குறித்து...
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி திரைப்படத்தின் டிரைலர் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் டிசி. இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக வாமிகா கபியும் நடித்துள்ளனர்.
கிளிம்ஸ் விடியோவில் பாலியல் தொழிலாளிகளாக வாமிகாவும் சஞ்சனாவும் நடிக்க, கேங்ஸ்டராக லோகேஷ் நடித்திருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்தப் படமும் பழிவாங்கும் கதையாகவே உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
அருண் மாதேஸ்வரனின் ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் ஆகியவை பழிவாங்கல் கதையாகவே உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக கடந்த ஏப்ரலில் நிறைவடைந்ததாகப் படக்குழு கூறியிருந்தது.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் கான்ஸ் திரைப்பட விழாவில் மே 15ஆம் தேதி திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
DC Trailer to be Screened at the Cannes Film Festival!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.