கடவுளைப் பார்ப்பது எளிதா?
கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவல் ஒரு மன்னனுக்கு ஏற்பட்டது. காட்டில் இருக்கும் முனிவர்களையெல்லாம் அரண்மனைக்கு வரவழைத்து வர உத்தரவு போட்டான். முனிவர்களும் வந்து சேர்ந்தனர்.
கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவல் ஒரு மன்னனுக்கு ஏற்பட்டது. காட்டில் இருக்கும் முனிவர்களையெல்லாம் அரண்மனைக்கு வரவழைத்து வர உத்தரவு போட்டான். முனிவர்களும் வந்து சேர்ந்தனர்.
அவர்களிடம், ""நீங்கள் கடவுளுக்கு யாகம், ஜபம், பூஜைகள் செய்வதாக சொல்லிக்கொண்டு உங்கள் காலத்தைக் கழிக்கிறீர்கள்....கடவுள் அதை ஏற்றுக் கொள்வதாகவும் சொல்கிறீர்கள்....எனக்கு கடவுளை நேரில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது...இப்போதே என்னை நீங்கள், ஜபம், ஹோமம், பூஜை செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். கடவுளைக் காண்பியுங்கள்! எனக்கு அவரை அறிமுகம் செய்து வையுங்கள்.'' என்றான் மன்னன்.
முனிவர்கள் திகைத்தனர்!
ஒரு முனிவர் மட்டும், "" மன்னா!...கொஞ்சம் பால் கொண்டுவரச் சொல்லுங்கள்!....'' என்றார்.
ஒரு பாத்திரத்தில் பால் வந்தது. ""இந்தைப் பாலிலிருந்து என்னவெல்லாம் கிடைக்கும்?...''என்று மன்னனிடம் கேட்டார் முனிவர்.
""இது தெரியாதா?....பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் எல்லாம் கிடைக்கும்!''
""அப்படியா?....சரி!...., உடனே இதிலிருந்து நெய்யை எடுங்கள் பார்ப்போம்!''
""அதெப்படி உடனே இதிலிருந்து நெய் கிடைக்கும்?...இதில் புரை ஏற்றித் தயிராக்க வேண்டும்....பிறகு அந்தத் தயிரைக் கடைந்து வெண்ணை எடுக்க வேண்டும்....அந்த வெண்ணையைக் காய்ச்சிய பிறகல்லவா நெய் கிடைக்கும்?''
அது போல்தான் கடவுளும்!.... வா என்றால் உடனே வந்துவிட அவர் நமது வேலைக்காரர் அல்ல....முனிவர்கள் ஆன்மீகப் பயிற்சிகள் மூலம் தங்கள் அகக் கண்ணால் அவரைப் பார்க்கின்றனர். சிலர் இதில் தீவிரமாக மூழ்கி நேரில் காணும் பாக்கியம் பெறுகின்றனர். முயற்சி உள்ள ஒவ்வொருவனும் கடவுளை நிச்சயம் காண்பான். பாலில், நெய் மறைந்து இருப்பது போல கடவுள் நம் கண்களுக்கு மறைந்து இருக்கிறான்.