முகப்பு
சிறுவர்மணி

சிறுவர் பாடல்!: சாலை!

விளைந்து கிடக்கும் பொருள்கள் மாந்தர் வேற்றூர் செல்ல உதவும்விரைந்து சென்று செயல்கள் முடிக்க

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

விளைந்து கிடக்கும் பொருள்கள் மாந்தர் 
வேற்றூர் செல்ல உதவும்
விரைந்து சென்று செயல்கள் முடிக்க
வேறில்லை இதுபோல் எதுவும்


வளைந்து நெளிந்து நீண்டு கிடக்கும் 
வண்டிகள் போகும் சாலை
வண்டிகள் ஓட்டம் நின்றால் நாட்டில்
வளர்ச்சிக்கேது வேலை?


சாலைகளில் நாம் செல்லும்போது
தக்க கவனம் வேண்டும்
சற்றே விழிப்பாய் இல்லாவிட்டால்
விபத்து நேரும் அங்கு


சாலை போக்கு வரவு சிறந்தால் 
தழைக்கும் மக்கள் வாழ்வு!
சாலை விதிகளை கடைப்பிடித்தால் 
சரியாகும் நமக்கு உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.