முகப்பு
சிறுவர்மணி

நினைவுச் சுடர்!: அன்பின் வலி!

அன்று நீதி மன்றத்தின் வேலைகள் முடிந்து விட்டன. நீதிபதி தன் ஓய்வு அறைக்குச் சென்றார். அங்கு அவருக்காக நண்பர்கள் காத்திருந்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:09 PM
பகிர்:

அன்று நீதி மன்றத்தின் வேலைகள் முடிந்து விட்டன. நீதிபதி தன் ஓய்வு அறைக்குச் சென்றார். அங்கு அவருக்காக நண்பர்கள் காத்திருந்தனர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தார். பேச்சு சுவாரசியமாகச் சென்றது. நேரம் சென்றதே தெரியவில்லை. நீதிபதி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். வழக்கமாக வீட்டிற்குக் கிளம்பும் நேரத்தைவிட அதிக நேரம் ஆகியிருந்தது. வேகமாக வீடு திரும்பினார் அவர்.  
 வாசலில்  அவரது தாயார் மகன் வரவில்லையே என்று கவலையோடு வெகுநேரம் காத்திருந்தார்.  மகனைப் பார்த்ததும் தாய்க்குக் கோபம் வந்துவிட்டது. கன்னத்தில் அடித்துவிட்டார். பிரமிப்புடன் தாயை நோக்கினார் நீதிபதி! சற்று நேரத்தில் நீதிபதியில்ன் கண்களில் நீர்!  ""ஏண்டா அழறே?...நான் அடிச்சுட்டேன் என்றா?...'' என்று கேட்டாள் தாய். 
 நீதிபதி தாயின் கைகளை பரிவோடு பற்றிக் கொண்டார்.  கண்களில் திரண்ட நீருடன், ""அம்மா!.... நான் அவ்வப்போது செய்யும் தவறுகளுக்கு உங்களிடம் அடி வாங்கியிருக்கிறேன்....அப்போதெல்லாம் உங்கள் அடி பலமாக இருக்கும்!....இன்று நீங்கள் அடித்த அடி பலமாக இல்லை....வயதாகிவிட்டதால் உங்கள் உடல் நலிவுற்று விட்டதே என்று எண்ணும்போது என் கண்களில் நீர் வந்து விட்டது!

தாயின் மனம் பூரித்துப் போய்விட்டது. அன்புடன் உணவருந்த அழைத்தாள் அந்த நீதிபதியை!
இதைச் சொன்னது காந்திக்குப் பிடித்த  "காகா காலேல்கர்!'  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.