சிறுவர்மணி

பாராட்டுப் பாமாலை! - 7 

வயதோ ஏழு!....இளம்பிஞ்சு அவனதுவாய்மொழி கேட்டால் உள்ளம் உருகும்!

சோழமைந்தன்

( உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது!)

வயதோ ஏழு!....இளம்பிஞ்சு அவனது
வாய்மொழி கேட்டால் உள்ளம் உருகும்!
பயன்மிகு ஆன்மிக உரை பல ஆற்றும் 
பாலகன் அவன் பெயர் "திருக்காமீஸ்வரன்!'

வில்லயனூரே அவனது ஊராம்!
வசிக்கும் பகுதி கிருஷ்ணா நகராம்!
எல்லையில்லாப் பரம்பொருள் தன்னை - அவன் 
எடுத்துச் சொல்லும் அழகே அழகாம்!

தேவாரக் கடல் முத்தை எடுப்பான்!...
திருவாசகத் தேன் அள்ளிக் கொடுப்பான்!
எம்மதத்தாரும் விரும்பும் வண்ணம் 
எளிமை கொண்டது அவனது பேச்சு!

தமிழகம் புதுவையின் சிற்றூர் பேரூர் - இந்தத் 
தங்கத் தம்பியின் உரையைக் கேட்கும்!
"தமிழின் இனிமை இதுவா?' என்று 
கேட்கும் கூட்டம் உள்ளம் மகிழும்!

உரையைக் கேட்கும் பல உள்ளங்கள் 
ஓடி வந்து பணம் உவந்து அளிக்கும்!
இறைவன் பெருமையை நாளும் கூறும் 
இதயம் நினைத்தது ஏழையின் துயரம்!

கிடைத்த பணத்தில் பெற்றோர் துணையுடன் - 
ஏழைகள் வாழ்ந்திடப் பொருள்கள் தந்தான்!
ஓர் ஏழை மாணவன்...மாற்றுத் திறனாளி! 
மூன்றுச் சக்கர வாகனம் கேட்டான்!

தந்தான் உடனே திருக்காமீஸ்வரன்! 
எரிபொருள், பராமரிப்பு என்று 
ஏற்படும் செலவுக்கு, கூட ஒரு லட்சம்...-ஏழைக்குத்
தெரிந்தான் கடவுள் அவனது வடிவில்!

கோடையில் பயணியர் துயரம் நீங்க - நிழற் 
குடையும் அமைத்தான் வில்லியனூரில்!
அருளுரைதந்து நிழல் தரும் குளிர்தரு! - இந்தக் 
குமணனை வாழ்த்துவோம் இப்பாமாலையால்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT