சிறுவர்மணி

அடையாளம்!

ஆர். அஜிதா

பிரபல நாவலாசிரியர் ஹார்டிங் டேவிஸின் மனைவி ஒரு நாள் ரயிலில் சென்று கொண்டிருந்தார். அவர் எதிரில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி நட்போடு, ""மிஸஸ் டேவிட், எனது அருகில் அமர மாட்டீர்களா?'' என அழைத்தார். மிஸஸ் டேவிட்டிற்கு அந்தப் பெண்மணி யாரென்று தெரியவில்லை. இருந்தாலும் அவர் அருகில் சென்று அமர்ந்தார். இருவரும் பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர். பேச்சு வாக்கில் அந்தப் பெண்மணி தன் சகோதரரைப் பற்றி குறிப்பிட்டார். ஒரு வேளை சகோதரரைப் பற்றி தெரிந்தால் அந்தப் பெண்மணியை அடையாளம் காணலாம் என நினைத்த மிஸஸ் டேவிட், ""உங்கள் சகோதரர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?'' என்று கேட்டார். ""ஓ!....அவர் இன்னும் அதே அமெரிக்க ஜனாதிபதி வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்!'' என்றார் அதிபர் ரூஸ்வெல்டின் சகோதரி டக்லஸ் ராபின்சன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT