முகப்பு
சிறுவர்மணி

அன்பளிப்பு!

ஒரு அரசனும் அமைச்சரும் குதிரைகள் பூட்டிய  ரதத்தில்  ஏறி ஊரைச் சுற்ரிப் பார்க்கக் கிளம்பினர்.

Updated On : 23 அக்டோபர், 2018 at 12:30 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:38 PM

ஒரு அரசனும் அமைச்சரும் குதிரைகள் பூட்டிய  ரதத்தில்  ஏறி ஊரைச் சுற்ரிப் பார்க்கக் கிளம்பினர். பாதையில் ஒரு மாந்தோட்டம் இருந்தது. மரத்தில் பழங்கள் பழுத்துத் தொங்கின. பார்த்தாலே நாவில் நீர் ஊறியது! அந்த மாந்தோட்டத்தின் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார்.  அவனிடம் ஒரு பழம் வேண்டும் என்று கேட்டார் அரசர். அவரும் அருகிலுள்ள ஒரு மரத்திலிருந்து ஒரு பழத்தைப் பறித்துக் கொடுத்தார்.  அதை நறுக்கி அமைச்சருடன் பகிர்ந்து சாப்பிட்டார் அரசர்! பழம் மிகவும் ருசியாக இருந்தது! 

பழத்தின் சுவையில் மயங்கிய அரசர் அரண்மனைக்கு நிறைய மாம்பழங்களை எடுத்துச் செல்ல நினைத்தார்.

""எனக்கு இரண்டு, கூடைகள் நிறைய இந்தப் பழங்களைத்  தர முடியுமா?...பணம் தருகிறேன்'' என்று கேட்டார். 

Advertisement

""வாருங்கள்....இது என் நண்பனின் தோட்டம்! அருகில் என் தோட்டம் இருக்கிறது..... அங்கும் இதே வகை மரங்கள் இருக்கின்றன.....இந்தப் பழம் போலவே அவைகளும் ருசியாக இருக்கும்!....பறித்துத் தருகிறேன்!....'' என்று கூறி அருகிலுள்ள தனது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார் அந்தத் தோட்டக்காரர்!

அங்கு இரண்டு பெரிய கூடைகள் நிறைப் பழங்களைப் பறித்து கூடைகளை இலைகளை வைத்துமூடிக் கட்டினார் தோட்டக்கார்.

""பார்த்தீர்களா?.... நண்பனின் தோட்டத்தில் உள்ள பழங்களை இலவசமாகப் பறித்துக் கொடுத்து விட்டு, பணம் என்றதும் தன் தோட்டத்துப் பழங்களைப் பறித்துத் தருகிறார்!....'' என்றார் அரசர் அமைச்சரிடம்!

அது அந்த மனிதரின் காதுகளில் விழுந்துவிட்டது!

அவர் அரசரை நோக்கி, ""நீங்கள் அரசர் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!....நீங்கள் ஒரு பழம் ருசி பார்க்கக் கேட்டீர்களே....என்று எனது நண்பரது தோட்டத்தில் பறித்துக் கொடுத்தேன்!.....ஆனால் நீங்கள் நிறையப் பழம் வேண்டும் என்று கேட்டதும், அவரைக் கேட்காமல் அங்கு பறிப்பது நேர்மை அல்ல என்று என் தோட்டத்திற்கு அழைத்து வந்தேன்.....நீங்கள் இந்தப் பழங்களுக்கு விலை கொடுப்பீர்கள் என்று திர்பார்க்கவில்லை.....கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை!....நல்ல ஆட்சி செய்யும் தங்களைக் காணும் பாக்கியமே எனக்குப் போதும்!....இதை என் அன்பளிப்பாக மறுக்காமல் எடுத்துச் செல்லுங்கள்!....''

தோட்டக்காரரைத் தவறாக எடை போட்டுவிட்டோம் என்பதை எண்ணி வெட்கப்பட்டார் அரசர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.