முகப்பு
சிறுவர்மணி

சிறுவர் பாடல்!: அறிவியல் வளர்ந்தாச்சு!

ஆட்டுக்கல்லும் போயாச்சு!அரைத்திட கிரைண்டர் வந்தாச்சு!வீட்டில் அம்மா மாவாட்டும் 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

ஆட்டுக்கல்லும் போயாச்சு!
அரைத்திட கிரைண்டர் வந்தாச்சு!
வீட்டில் அம்மா மாவாட்டும் 
வேலை மிகவும் எளிதாச்சு!

அம்மிக் கல்லும் போயாச்சு!
அதற்கோர் மிக்ஸி வந்தாச்சு!
காய்கறி, பழங்கள் கெட்டுவிடாமல்
காத்திடும் குளிர்சாதனப்பெட்டி!

வெள்ளாவி வைத்துத் துணிகளையே 
வெளுக்கும் காலம் போயாச்சு!
அள்ளிப் போட்டால் துவைப்பதற்கு 
அழகாய்  இயந்திரம் வந்தாச்சு!

வானொலிப் பெட்டி போயாச்சு
வந்தது வண்ணத் தொலைக்காட்சி!
உடனடி பாக்கெட் வந்தாச்சு
சமைப்பது இங்கே எளிதாச்சு!

விண்ணில் சாட்டிலைட்  விட்டாச்சு
விரைந்து அறிவியல் வளர்ந்தாச்சு!
கல்வி, கேள்விக்கு உதவி செய்ய
கணினியில் கூகுள் வந்தாச்சு!

வழியைக் காட்டும் வரைபடத்தோடு
ஆண்ட்ராய்டு செல்ஃபோன் இருக்கிறதே! - போனில்
படத்துடன் செய்திகள் அனுப்பி இங்கே 
பலருடன் பகிர்வது எளிதாச்சு!

மின்சாரம் சட்டெனப் போனவுடன் - சில
இயக்கங்கள் சற்றே நின்றுவிட்டால்
தடையே இல்லா மின்சக்தியினைத்
தருவதற்கு இன்வெர்டர் வந்தாச்சு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.