முகப்பு
சிறுவர்மணி

நினைவுச் சுடர்!: சொல்லாததற்குக் காரணம்!

விவேகானந்தர் இந்தியாவிலிருந்து ஆன்மீகச் சொற்பொழிவுக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

விவேகானந்தர் இந்தியாவிலிருந்து ஆன்மீகச் சொற்பொழிவுக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவர் சில நாட்கள் தங்க வேண்டியிருந்தது. அவர் வெள்ளையர்களைவிட சற்று கருப்பாக இருந்ததால் சில அமெரிக்க வெள்ளையர்கள் அவரை  "நீக்ரோ' இனத்தவர் என நினைத்தனர். அந்நாட்களில் நீக்ரோக்கள் அமெரிக்காவில் கேவலமாக நடத்தப்பட்டார்கள்.  விவேகானந்தர் தன்னை யாராவது "நீக்ரோ' என்று கூறினால் அதை மறுத்துப் பேசுவதில்லை. 

சுவாமிஜி மற்ற நீக்ரோக்களைப் போலவே சில இடங்களில் தாழ்வாக நடத்தப்பட்டார். ஒரு நாள் அவர் அமெரிக்காவிலுள்ள ஒரு சலூனுக்குப் போனார். அவரை நீக்ரோ என நினைத்த சலூன்காரர், அவரை வெளியே போக உத்தவிட்டார். அமைதியாக வெளியேறினார் அவர்.

மற்றொரு சமயம் அவரை நீக்ரோ என்று நினைத்து,   ஒரு ஹோட்டலில் அவருக்குத் தங்குவதற்கு இடம் தர மறுத்தனர்...வெளியே போ!...என்று துரத்தினர். 

அப்போதும் தான் நீக்ரோ அல்ல என்று சொல்லவில்லை. 

நீண்ட நாட்களுக்குப் பிறகு மேலைநாட்டு சீடர் ஒருவர் சுவாமிஜியிடம்,   

""நீங்கள் நீக்ரோ அல்ல....என்று  சொல்லியிருக்கலாமே!....ஏன் சொல்ல
வில்லை?...''

""அப்படியானால் நீக்ரோ என்னைவிடத் தாழ்வானவன் என்பதை நானே ஒப்புக் கொள்வதுபோல் ஆகாதா/....மனிதரில் பேதத்தை என்னால் பார்க்க முடியாது....மேலும் அதனால் கிடைக்கும் சலுகைகள் எனக்குப் பிடிக்காது!... அது ஒருவனைக் கீழே தள்ளிவிட்டு இன்னொருவன் முன்னேறுவது போலாகும்!...நான் அதற்காக இந்த உலகில் பிறக்கவில்லை!'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.