முகப்பு
சிறுவர்மணி

 சிறுவர் பாடல்!

கடிதம் எழுதணும் தம்பிகடிதம் எழுதணும்!

Updated On : 3 செப்டம்பர், 2018 at 10:51 AM
பகிர்:

கடிதம் எழுதணும்!
கடிதம் எழுதணும் தம்பி
 கடிதம் எழுதணும்!
 நலம் கேட்டு நாலு வார்த்தை
 கடிதம் எழுதணும்!
 
 கைப் பேசிக்குள் மூழ்கி
 கா ணாமல் போகாதே!
 கடிதம் எழுதும் பழக்கம் நன்று
 மறந்து போகாதே!
 
 எழுதும் பழக்கம் ஏற்றம் தரும்
 எண்ணிப் பாரு நீ!
 உனக்கு வந்த கடிதம் படித்துச்
 சுகத்தை உணரு நீ!
 
 உன் கடிதம் கண்ட உந்தன்
 உறவினர் நண்பர்
 உணர்ச்சி பொங்க நன்றி கூறி
 உன்னை வாழ்த்துவர்!
 
 
 - வசீகரன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.