சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

ரொசிட்டா

கேள்வி: தீக்கோழிகள் மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளுமாமே! இது உண்மையா?

பதில்: சுத்தப் பொய்!  மண்ணுக்குள் தலையைப் புதைத்தால் மூச்சு முட்டி இறந்து போய் விடுவோம் என்பது தீக்கோழிக்குத் தெரியும். இப்படி ஒரு வதந்தி பரவியதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று :

தீக்கோழி, எதிரியிடமிருந்து தப்பிக்க முடியாத இக்கட்டான நிலை வரும்போது, தனது தலையையும் கழுத்தையும் தரையில் அப்படியே படுக்கை வசமாகக் கிடத்தி விடும். மொத்தமும் பழுப்பு நிறமாக, தரையைப் போலக் காட்சியளிப்பதால் எதிரி இடத்தை விட்டு நகர்ந்து போய் விடும். தீக்கோழியும் தப்பித்து விடும்.

இரண்டு:

தீக்கோழி தரையில் சிறியை குழியை தோண்டி அதில் தனது முட்டைகளை இடும். தனது முட்டைகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்று அவ்வப்போது குழிக்குள் தலையை விட்டுப் பார்த்து, உறுதிப்படுத்திக் கொள்ளும்.
இத்தகையை காட்சிகளைக் கண்டவர்கள்தான் மேலே சொன்ன வதந்தியைப் பரப்பியவர்கள். 

வதந்திகளைப் பரப்புவது பாவம் அல்லவா?.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

மூலைக்கரைப்பட்டியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நிறுவன தினம்...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

SCROLL FOR NEXT