முகப்பு
சிறுவர்மணி

குழந்தைப் பாட்டு!: கூடி வாழ்வோம்!

இரண்டு இமைகள்  இணைந்திட்டால்தான் விழியை மூடிக் காக்கலாம்!இரண்டு உதடு இசைந்திட்டால்தான் 

Updated On : 24 ஆகஸ்ட் 2019, 3:18 pm IST
பகிர்:


இரண்டு இமைகள்  இணைந்திட்டால்தான் 
விழியை மூடிக் காக்கலாம்!
இரண்டு உதடு இசைந்திட்டால்தான் 
குழலில் இசையை ஊதலாம்!

இரண்டு கால்கள் இயங்கினால்தான் 
தரையின் மீது நடக்கலாம்!
இரண்டு சிறகு அசைந்திட்டால்தான் 
பறவை வானில் பறக்கலாம்!
விரல்கள் ஐந்து இணங்கினால்தான் 
சோற்றைப் பிசைந்து உண்ணலாம்!
கரங்கள் இரண்டு குவிந்திட்டால்தான் 
வணக்கம் செய்து மகிழலாம்!

நாலு கால்கள் நிலைத்திட்டால்தான் 
பந்தல் மேலே போடலாம்!
நாலு பேர்கள் கூடினால்தான் 
நற்செயல்கள் நடந்திடும்!

Advertisement

கூடி வாழும் வாழ்விலேதான் 
கோடி இன்பம் உளதெனப் 
பாடிவைத்தார் நமது கவிஞர் 
பாரதியார் தானடா! 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.