சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

தினமணி

 
கேள்வி:


புறாக்களை வளர்ப்பவர்கள் அதை வானில் பறக்க விடுகிறார்கள். சிறிது நேரம் கழித்து அவை மீண்டும் அவர்களிடத்தே வந்து விடுகின்றன. புறாக்கள் என்ன அவ்வளவு புத்திசாலிப் பறவைகளா?
பதில்: புறாக்கள் புத்திசாலிகள் மட்டுமல்ல; அவைகளுக்கு ஞாபகசக்தியும் அதிகம். இவைகளின் மற்றொரு சிறப்பம்சம், வெகுதூரம் பறந்து சென்றாலும் மீண்டும் தங்களை வளர்ப்பவர்களின் வீட்டுக்கேத் திரும்ப வந்து விடும் திறமைதான். இந்த அம்சம் புறாக்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. இதற்குக் காரணம் Magnetoreception என்ற இறைவன் கொடுத்த வரம்தான். அதுவும் வளர்ப்புப் புறாக்களுக்கு இந்த சக்தி அதிகம். அதனால்தான் வெகுதூரம் வரை பறந்து சென்றுவிட்டு மீண்டும் தனது எஜமானரின் வீட்டைச் சரியாக வந்து சேர்ந்து விடுகின்றன.
இந்த வகை புறாக்கள் 1,800 கி.மீட்டர் தொலைவு வரை பறந்து சென்று விட்டு தங்களது இருப்பிடத்துக்குத் திரும்பிய சாதனைகளும் உண்டு.
இவற்றின் சராசரி பறக்கும் வேகம் மணிக்கு 97 கி.மீ. ஆகும். சில புறாக்கள் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பறந் ததாகக்கூட பதிவுகள் உள்ளன.
இந்த சிறப்புத் தன்மையால்தான் முற்காலத்தில் புறாக்கள் தபால்களைக் கொண்டு சேர்க்கப் பயன்பட்டன. மன்னர்கள் காலத்தில் தூது செல்வதற்கும் பயன்பட்டன.                                   

அடுத்த வாரக் கேள்வி
ஜூராசிக் பார்க் திரைப்படத்தில் வருவது போல டைனோசர்கள் உண்மையிலேயே இருந்தனவா, அவற்றில் எத்தனை 
வகைகள் இருந்தன?

பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT