சிறுவர்மணி

வருக புத்தாண்டே!

வருக வருக புத்தாண்டே!வருக வருகவே!வாழ்த்தி உன்னை வரவேற்றோம்

கவி . மனோபாரதி

வருக வருக புத்தாண்டே!
வருக வருகவே!
வாழ்த்தி உன்னை வரவேற்றோம்
வருக வருகவே!

வளமெங்கும் நிறைந்திடணும் 
உன் வரவாலே
வையமெல்லாம் மகிழ்ந்திடணும் 
உன் பிறப்பாலே!

அன்பும் அறமும் பெருகிடணும் 
உன் வரவாலே!
ஆன்மநேயம் தழைத்திடணும் 
உன் பிறப்பாலே!

வன் முறைகள் ஒழிந்திடணும் 
உன் வரவாலே!
நன்னெறியை நிலவிடணும் 
உன்  பிறப்பாலே!

கடந்து போன துயரமெல்லாம் 
மறைந்திடவேணும் - இனி
நடப்பதெல்லாம் நன்மையாக 
நடந்திட வேணும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாய நதி... டெல்னா டேவிஸ்

பிகாரில் ஒரேகட்டமாக தேர்தல்? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்!

தேயாத நிலா... ரேஷ்மா!

காந்த கண்ணழகி... ரோஸ் சர்தானா

பிரிட்டன் பிரதமர் கியா் ஸ்டாா்மா் இந்தியாவுக்கு வருகை..!

SCROLL FOR NEXT