முகப்பு
சிறுவர்மணி

பாராட்டுப் பாமாலை!  36: மாஞ்சியின் சாலை!

பீகார் மாநிலம் கஹ்வோர் கிராமம்பெருமலை அடிவாரம் இயல்பான சிற்றூர்

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:21 AM
பகிர்:

பீகார் மாநிலம் கஹ்வோர் கிராமம்
பெருமலை அடிவாரம் இயல்பான சிற்றூர்
ஆகா என ஏதுமிலா விவசாயப் பணிகள்
அங்கே அவர்கள் எளிமையாய் வாழ்ந்தனர்

கிராமத்து மக்கள் நகருக்குச் செல்ல 
கீழிருந்து மேலேறி ஒற்றையடிப் பாதையில்
சிரமப்பட்டே சென்றே வந்தனர் மக்கள்
கல்முள் புதர்கள் அடர்ந்த பாதையில்

"மாஞ்சி' என்ற உழைக்கும் விவசாயி 
வாழ்ந்து வந்தார் நல்ல உழைப்பாளி
மாஞ்சியின் மனைவி மலையில் ஏறுகையில் 
வழுக்கி விழுந்தார்.... உயிரும் பிரிந்தது!....

மாஞ்சி யோசித்தார் மலையில் சரியாய் 
வழி இல்லாததால் மரணம் நிகழ்ந்தது....
மாஞ்சி எழுந்தார்!... மண் வெட்டி எடுத்தார்!...
மலையை வெட்டிச் சாலையை அமைத்தார்!

வெயிலில் மழையில் இருபத்து இரண்டு 
வருடங்கள் உழைத்தார் சாலையை அமைத்தார்!
நூற்றுப்பத்து மீட்டர் நீளமும்  - அழகாய்
பத்து மீட்டர் அகலமும் இருந்தது!

ஒற்றை ஆளாய் உதவிகள் இன்றி 
உயர்ந்த மனதால் உருவான சாலை
கற்றோர் போற்றினர் இந்தி மொழியில்
திரைப்படம் எடுத்தனர் புகழ் பரவியதே!

மாஞ்சியின் சாலையை மக்கள் பாராட்டினர்
மாஞ்சியின் உழைப்பை, உயர்ந்த மனத்தை
நாமும் வாழ்த்துவோம் மாணவர்க்கு இதுவே 
வழிகாட்டும்! உரமூட்டும்! வாழிய வாழி!

முழு கட்டுரையைப் படிக்க →