நினைவுச் சுடர்!: பணமல்ல; வாக்குறுதி!
ஒருமுறை காந்தியடிகள் கோவை வந்திருந்தபோது, ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஒரு புகைப்படத்தை காந்தியடிகளிடம் கொடுத்து, அதில் காந்தியடிகளின் கையெழுத்து வேண்டும் என்று கேட்டார்.
ஒருமுறை காந்தியடிகள் கோவை வந்திருந்தபோது, ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஒரு புகைப்படத்தை காந்தியடிகளிடம் கொடுத்து, அதில் காந்தியடிகளின் கையெழுத்து வேண்டும் என்று கேட்டார்.
""என் கையெழுத்திற்கு அதிக விலை தரவேண்டும்'' என்றார் காந்தியடிகள்.
""எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்'' என்றார் ஏ.கே.செட்டியார்.
காந்தியடிகள் அவரிடம், ""நான் கேட்பது பணம் அல்ல; ஒரு வாக்குறுதி. ஒவ்வொரு நாளும் அரைமணி நேரம் கைராட்டையால் நூல் நூற்பதாக எனக்கு நீங்கள் வாக்குறுதி தரவேண்டும்'' என்றார்.
சண்முகம் செட்டியார் யோசித்துவிட்டு, ""நிச்சயம் இதை செய்ய முடியாதே!'' என்றார்.
உடனே காந்தியடிகள், ""உமது நேர்மையைப் பாராட்டுகிறேன். வாக்குறுதி தந்து மீறுவதை விட, முடியாது என்பதை ஒப்புக்கொண்ட உம்மை பாராட்டுகிறேன்'' என்றார்.