முகப்பு
சிறுவர்மணி

பாராட்டுப் பாமாலை!  37: ஏரி காத்த இளைஞருக்குப் பாராட்டு

ஐ.டிதுறையில் பணிபுரியும்ஆனந்த் மல்லிகாவத் என்பவர்தான்செய்யும் சேவையைக் கேளுங்கள்

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:51 AM
பகிர்:

ஐ.டிதுறையில் பணிபுரியும்
ஆனந்த் மல்லிகாவத் என்பவர்தான்
செய்யும் சேவையைக் கேளுங்கள்
சிறப்பை அறிந்தால் அதிசயிப்பீர்!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
தொடர்ந்து வளரும் பெங்களுரூவில்
தனியாய் அமைந்த ஒரு கிராமம்
காஞ்சனஹள்ளி எனும் பேராம்!

முப்பத்தாறு ஏக்கரிலே
முழுதாய் அமைந்த ஓர் ஏரி!
இப்போது இரண்டு ஏக்கர் மட்டும்
இருந்ததாம் தண்ணீர் குறைவாக!

மரங்கள், பறவைகள் ஏராளம்
மறைந்து இன்று வறண்டு விட
அரசின் இடத்தை மக்களுமே
ஆக்கிரமித்து விட்டார் எளிதாக!

ஏரியின் நிலையை ஆனந்துமே
எடுத்துக்கூறினார் நிறுவனத்தில்!
நேரில் பார்த்த அவர்களுமே
சீர் செய்ய ஒரு கோடி பணமளித்தார்!

ஊக்கம் கொண்ட ஆனந்தும்
உதவி கேட்டார் நண்பர்களிடம்
ஆக்கம் தேட ஆயிரமாய்
அங்கே வந்தார் இளைஞர் பலர்
படித்த படிப்பை பயன்படுத்தி
பயனுற பல செயல் செய்தாரே!
அடுத்து மக்களும் ஆக்கிரமிப்பை
அகற்றி உதவி புரிந்தனராம்!

நாற்பத்து ஐந்து நாட்களிலே
நல்ல ஏரியுடன் நடைபாதை
ஏற்படும் நிலைவர இன்றைக்கு
எட்டடி உயரத்தில் நீருண்டு!

நீர் மட்டம் உயர்ந்ததால் மரங்களுடன்
நிலங்களும் செழித்து வளர்ந்தனவாம்!
பார்க்கும் இடங்களில் பசுமையுடன்
பறவைகள் கால்நடை பயன்பெறுமாம்!

எனக்காக வாழ்ந்தேன் இருபதாண்டு
இனி வரும் ஐந்து ஆண்டுகளும்-பூமித்
தாய்க்காய் வாழப் போகின்றேன்- என்று
தன்னம்பிக்கையுடன் பேசுகிறார்

ஏரி காத்த இளைஞரையே
யாவரும் சேர்ந்து இவரைப்போல்
ஊருக்கு ஒருவர் வேண்டுமென
உவப்பாய்ச் சொல்வோம் பாராட்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.