முகப்பு
சிறுவர்மணி

பொறுமை பொன்மொழிகள்

பொறுமை, தூய்மை, விடாமுயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை.

Updated On : 25 ஜூன், 2020 at 5:38 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 6:39 PM

*பொறுமை, தூய்மை, விடாமுயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை.
 - விவேகானந்தர்
 * பொறுமையே பொறாமையை வெல்லும் என்பது உறுதி!
 - திரு.வி.க.
 * பொறுமையாக இருப்பவன் எப்போதும் அழிய மாட்டான்.
 - இராமகிருஷ்ணர்
 * சுகம், துக்கம்.... என்ற இரண்டையும் ஒன்றாகக் கருதுவதே பொறுமை!
 - இராமதாசர்
 * பொறுமையுள்ளவர்கள் மலைகளை மிதித்தே கடந்து விடுவார்கள்!
 - காந்திஜி
 * பொறுமைதான் உண்மையான திறமை!
 - வால்டேர்
 * பொறுமையைவிடச் சிறந்த ஆயுதம் கிடையாது!
 - வால்மீகி
 * பொறுமையைவிட மகிழ்ச்சி வேறேதும் இல்லை!
 - புத்தர்
 * பொறுமையே சிறந்த பரிந்துரைக் கடிதம்!
 - அரிஸ்டாட்டில்
 * பொறுமை என்பது மகிழ்ச்சியின் தாயாகும்!
 - டால்ஸ்டாய்
 தொகுப்பு :
 நெ.இராமன், சென்னை.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.